முக்கியத்துவம்:- கடிதப் போக்குவரத்து என்பது அலுவலக நடைமுறையில் ஒரு முக்கியமான அங்கமாகும். இது இரண்டு வழி நடவடிக்கை ஆகும். ஒன்று அலுவலகத்திற்கு வெளியிலிருந்து வரப் பெறும் கடிதங்கள். மற்றொன்று அலுவலகத்திலிருந்து வெளியே அனுப்பப்படும் கடிதங்கள். இவ்விரண்டு நடவடிக்கைகளுக்கும் அலுவலகத் தலைவர், பிரிவுத் தலைவர்கள் மற்றும் எழுத்தர்கள் கூட்டுப் பொறுப்பு வகிக்கின்றனர். கடிதப் போக்குவரத்தை நிர்வாகத்தின் ஆணிவேர் என்று சொல்லலாம். ஏனெனில், நிர்வாகம் கடிதப் போக்குவரத்தின் மூலமாகவே நடைபெறுகிறது. அலுவலகத்திற்கு உயர் அலுவலகங்கள், அரசு, சார்நிலை அலுவலகங்கள், இதர துறை அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து வெவ்வேறு வடிவில் பெறப்படும் கடிதங்களை அலுவலகத் தலைவர் பார்வையிட்டு, பிரிவுகளுக்கு வழங்கப்பட்டு, பிரிவு எழுத்தர்களுக்கு பகிர்மானப் பதிவேட்டின் படி வழங்கப்பட்டு, அவர்களது தன்பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இத்துடன் Incoming Tapals என்ற நடவடிக்கையின் மூலம் கடிதப் போக்குவரத்தில் 50% பணி நிறைவு பெறுகிறது. மீதி 50% பணியும் முழுமையாக நிறைவடைய வேண்டும...