Skip to main content

தமிழ்நாடு விடுப்பு விதிகள் 1933 ஒரு பார்வை

  • அரசு ஊழியர்களுக்கான பல்வேறு விடுப்பு  விதிகள்  அடிப்படை விதி 58 முதல் அ.வி. 104 வரை சொல்லப்பட்டு 01.01.1922 முதல் நடைமுறையில் இருந்தன. 
  • அவ்விதிகள் அரசு ஊழியர்களுக்கு போதுமான பயன் தரதக்க வகையில் அமையவில்லை. அதனால் தனியாக விடுப்பு விதிகள் தயாரிக்கப்பட்டு 4.9.1933 -ல் தமிழ் நாடு விடுப்பு விதிகள் நடைமுறைக்கு வந்தன.

அரசு ஊழியர்களுக்கு தகுதியான விடுப்புகள்:-

1.ஈட்டிய விடுப்பு த.ந.வி. வி.எண் 8

  • தமிழ்நாடு அரசு 01.07.1994 முதல் ஈட்டிய விடுப்பினை கணக்கிடும் முறையினை மாற்றியமைத்தது.
  • அடிப்படை பணியில்  முறையாக ஐந்து வருடம் பணி முடிகாத பணியாளர்களுக்கு ஒரு வருடத்தில் 15 நாட்கள் மட்டுமே  வரவு வைக்க முடியும் . அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிக இருப்பு 30 நாட்களுக்கு மிகை ஆக கூடாது.
  • அடிப்படை பணியாளர் முறையாக ஐந்து வருடம் பணி முடிகாத பணியாளர்களுக்கு முன் வரவு வைக்க தகுதி இல்லை. மற்றும் இரண்டு முழு நாட்காட்டி பணி காலத்திற்கு 2  1/2  நாட்கள் வரவு வைக்கப்படும்.
  • உயர் பணியில் தகுதிகாண் பருவம் முடித்தவர்கள் மற்றும் அடிப்படை பணியில் ஐந்து வருடம் முறையாக பணி முடித்த அரசு ஊழியர்களுக்கு ஒரு வருடத்தில் 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு கனக்க்கில் வரவு வைக்கப்படும்.
  • உயர் பணியில் தகுதிகாண் பருவம் முடித்தவர்கள் மற்றும் அடிப்படை பணியில் ஐந்து வருடம் முறையாக பணி முடித்த அரசு ஊழியர்களுக்கு  ஒவ்வொரு முழு நாட்காட்டி மாதம் களுக்கும் 2 1/2 நாட்கள் ஈட்டிய விடுப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். மற்றும் அதிக அளவு இருப்பு  ஒரு ஆண்டில் இரண்டாம் அரையாண்டில் (December ) 240 நாட்கள் மேல் மிகை ஆக கூடாது. 
  • ஈட்டிய விடுப்பு கணக்கு பற்றிய மேலும் வழிமுறைகள் இணைப்பில் இணைக்கப்பட்டு உள்ளது. 
2.சொந்த அலுவல் பேரில் ஈட்டா விடுப்பு   த.ந.வி. வி.எண். 13 (ம) 

14 :-

  • சொந்த அலுவல் பேரில் ஈட்டா விடுப்பு உயர் நிலை பணியாளர்களுக்கு அவர் தகுதிகாண் பருவம் முடிக்கும் வரை தகுதி இல்லை.  தகுதிகாண் பருவம் முடித்தவர்கள் 10 ஆண்டுகள் பணி முடியும் வரை 90 நாட்கள் அவரது விடுப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணி முடிட்டவர்களுக்கு அவரது விடுப்பு கணக்கில் 180 நாட்கள் அதிக பட்சம் ஆக வரவு வைக்கப்படும்.
  • சொந்த அலுவல் பேரில் ஈட்டா விடுப்பு அடிப்படை பணியாளர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்த நாள்முதல் 15 ஆண்டுகள் பணி முடிக்கும் வரை தகுதி இல்லை. 
  • 15 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிபவர்களுக்கு அவரது விடுப்பு கணக்கில் அதிக பட்சம் ஆக 180 நாட்கள் வரவு வைப்படப்படும் 
3.மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு

4. மருத்துவனை விடுப்பு
5.சிறப்பு இயலாமை விடுப்பு
6. அசாதாரண விடுப்பு 
7. அயல் நாட்டில் பணி புரிவதற்கான விடுப்பு 
8. சிறப்பு தற்செயல் விடுப்பு 

மேற்கண்ட விடுப்புகளுக்கு குறித்த விரிவான வழிகாட்டி நடைமுறைகள் PDF  ஆக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது