Skip to main content

கருணை அடிப்படையில் பணி நியமனம் முறை

கருணை அடிப்படை ஒரு பார்வை:

     

  • ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும் போது  இறந்து விட்டால் அவரது குடும்பம் பொருளாதார அடிப்படையில் மிகவும் பாதிக்கப்படும். இந்நிலையில் அரசு அந்த குடும்பத்தின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு கருணையின் அடிப்படையில் அவரது வாரிசுகளுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் அரசு பணி நியமனம் வழங்கும்.
  • ஒரு அரசுப்பணியாளர் அவரின் குடும்பம் நலனை கருத்தில் கொண்டு வழங்கப்படும் பணியை அவரது குடும்பத்தினர் உரிமை கொள்ளல் இயலாது. 
  • ஒரு அரசுப்பணியாளர் இறந்து மூன்று ஆண்டுக்குள் அவரது வாரிசுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது அவரது வாரிசுகளுக்கு 18 வயது நிறைவு  செய்த்திருக்க வேண்டும்.
  • 53 வயது பூர்த்தி ஆகும் முன்னரே மருத்துவ ரீதியாக இயலா நிலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வாரிசுகளும்  அரசாணை நிலை எண் 18 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நாள்: 23.01.2020 - இன் படி கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதி உண்டு.
  •  ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும் போது இறக்க நேரிடும் போது அவரது திருமணம் ஆன பெண் வாரிசுக்ளுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதி உண்டு.
  • முறையான அரசு ஊழியர் என்பது பணி வரன்முறை செய்யப்பட்ட அரசு ஊழியர்களையே குறிக்கும். கருணை அடிப்படை பணி வழங்க இறந்த அரசு ஊழியர் தகுதி காண் பருவம் விளம்புகை  செய்து இருக்க வேண்டுயது இல்லை.
  • Click here  PDF File