Skip to main content

தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் பின்பற்றப்படும் அலுவலக நடைமுறை நூல்

முன்னுரை:-

  • அலுவலக நடைமுறை நூல் முதலில் வருவாய்த்துறை அலுவலகங்களில் அலுவலக நடைமுறையும் , கடித போக்குவரத்து பிரிவில் பணியை துரிதப்படுத்துவதற்காக ஏற்படுத்த ப்பட்டது
  • அலுவலகங்களில் ஒருவர் புதியதாய் பணியில் சேர்ந்த உடன் அலுவலக நடைமுறை நூலினை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
  • பிரிவு தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இளநிலை உதவியாளர் மற்றும், உதவியாளர் அனைவருக்கும் இந்த நூலின் உள்ள விதிமுறைகளை தெரிந்து உள்ளதா என்பதைப் உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். 
  • அரசு பணியாளர் மற்றும் அலுவலர்கள் இந்த நூலின் உள்ள விதிமுறைகளின் படி தான் அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும். அலுவலக நடைமுறைக்கு எதிராக நடவடிக்கைக்கு வழி வகுக்க  கூடாது.

வருகை நேரம்:- 

  • அரசு பணியாளர்கள் அனைவருமே வேலை நாட்களில் ஒழுங்காகவும் , காலை 10 மணிக்கும் அரசு அலுவலகத்தில் வந்து சேர வேண்டும்.
  • அலுவலக நேரம் காலை 10 மணியில் இருந்து  மாலை 5.45 மணிவரை இயங்கி வருகிறது.
  • அரசு பணியாளர்கள் உணவு அருந்துவதற்காக மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் 30 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். 
  • ஒரு அலுவலகத்தில் அரசு பணியாளர்கள் ஒரே நேரத்தில் அனைவரும் உணவு அருந்த செல்ல கூடாது. அணி அணியாய் சென்று வர வேண்டும்.  
  • அலுவலக நேரத்தினை தவறாமல் பின்பற்ற வேண்டும். அலுவலக நேரத்திற்கு அப்பால் வேலை செய்யும் நேரத்தினை அலுவலகத்தில் இல்லாமைக்கு ஒப்பாக எடுத்து கொள்ளப்பட  மாட்டாது.
  • அரசு பணியாளர்கள் அவரவர் மத சம்பந்தப்பட்ட பண்டிகைகளுக்கு முன் அனுமதி  தாமதமாக  வரலாம். இதன் விரிவான  விளக்கம் பின்வரும் PDF -ல் கொடுக்கப்பட்டு உள்ளது. 

வரையறுக்கப்பட்ட விடுப்பு:-

  • அரசு பணியாளர்கள் இணைப்பில் (PDF ) காணும் விழாக்களுக்கு ஒரு வருடத்திற்கு 03 நாட்கள் மட்டும் வரையறுக்கப்பட்ட விடுப்பு வழங்கப்படும். 
  • இந்த விடுப்பு எம்மதத்தினறும்  அனுபவித்து கொள்ளலாம். எழுத்து பூர்வமாக அனுமதியின் அடிப்படையில் தற்செயல் விடுப்பாக அலுவலக தலைவரே ஒப்புதல் வழங்க வேண்டும். 

வருகை பதிவேடு :-

  • ஒவ்வொரு அலுவலகத்திலும் பிரிவு தலைவர்கள் பொறுப்பில் இவை இருக்க வேண்டும்.
  • இப்பதிவேடு உரிய முறையில் மற்றும் குறிப்பிட்ட படிவத்தில் பராமரிக்க வேண்டும். 
  • அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் அவர்கள் பெயர்களுக்கு நேராக சுறுக்கொப்பம் செய்ய வேண்டும். 
  • இந்த பதிவேடு அலுவலக நேரத்திற்கு 10 நிமிடங்கள் (10.10) பின்னர் மூடப்பட்ட வேண்டும். அலுவலக தலைவர் வசம் ஒப்படைக்க வேண்டும்.  
  • இந்த பதிவேடு கீழ்கண்ட பதிவேடு களுடன் ஒரு தொகுப்பாக பராமரிக்க வேண்டும். 

தாமதம் வருகை மற்றும் அனுமதி பதிவேடு :- 

  • அலுவலக நேரம் காலை 10 மணி முதல் ஆரம்பிக்கிறது. அனைவரும் 10.10 மணிக்குள் வருகை பதிவேட்டில் சுறுக்கொப்பம் இட வேண்டும். 10.10 மணிக்குள் வருகை பதிவேடு மூட வேண்டும். அலுவலர்கள் எவரேனும் அலுவலகத்தில் தாமதம் ஆக வந்தால்  இந்த பதிவேட்டில் அலுவலர்கள் வந்த நேரத்தினை குறிக்க வேண்டும். வருகை பதிவேட்டில் தாமதம் என குறிக்க வேண்டும்.
  •  ஒரு மாதத்தில் அனுமதி உடன்  03 நாட்களுக்கு தாமதமாக வந்தால் அரை நாளும் மற்றும் அனுமதி இல்லாமல் தாமதமாக வந்தால் ஒரு நாள்  தற்செயல் விடுப்பு பறிக்கப்படும். 
  • தற்செயல் விடுப்பு அவருடைய விடுப்பு கணக்கில் இல்லாமல் இருக்கும் போது அவரது ஈட்டிய விடுப்பு கணக்கில் இருந்து பறிமுதல் செய்யலாம். 

தற்செயல் விடுப்பு :- 

  •  01.06.85 முதல் அரசு பணியாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு 12 நாட்கள் இந்த விடுப்பு வழங்கப்படும். விண்ணப்பம் கொடுத்து  உத்தரவு பெற்ற பின்னர்தான் இந்த விடுப்பில் செல்ல இயலும்.
  • எதிர்பாராத காரணங்களினால் ஒருவர் விடுப்பில்   முன் அனுமதியின்றி விடுப்பில் செல்லலாம். அவ்வாறு செல்லும் போது அதற்கான காரணத்தை விண்ணப்பத்தில் பின்னர் தெரிவிக்கப்பட வேண்டும்.   
  • மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 03 - ம் தேதி சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கப்படும். 
  • ஒரு பணியாளர் ஒரே சமயத்தில் 10 நாட்கள் மேல் தொடர்ந்து எடுக்க முடியாது. தற்காலிக பணியாளர்கள் பொறுத்தவரையில் அவர் பனிக்காலத்தின் அடிப்படையில் இந்த விடுப்பு வழங்கப்படும். 

ஈடு செய்யும் விடுப்பு :- 

  • இ மற்றும் ஈ பிரிவு அரசுப் பணியாளர்களுக்கு விடுமுறை நாட்களில் வேலை செய்யும் படி பணிக்கப்பட்டால் அவர் அந்த விடுப்பினை ஈடு செய்யும் விதமாக மற்றோரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
  • எந்த விடுமுறை நாளில் வேலை செய்தார்ரோ அந்த நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் மனு செய்து அவருடைய விடுப்பு கணக்கில் ஈடு செய்யும் விடுப்பினை பதிவு செய்யும் படி கேட்டு கொள்ள வேண்டும்.  
  • இந்த விடுப்பினை தற்செயல் விடுப்புடன் மற்றும் பிற விடுப்புடன் எடுத்து கொள்ளலாம் ஆனால் ஒரே சமயத்தில் 10 நாட்கள் மேல் போக கூடாது. 
  • அரசு ஊழியர் கடைசி வருட கடைசி மாதத்தில் விடுமுறை நாட்களில் வேலை செய்தால் அடுத்த வருடத்தில் ஆறு மாத காலத்திற்குள் எடுத்து கொள்ளலாம். 

சிறப்பு தற்செயல் விடுப்பு :- 

  • சிறப்பு காரணங்களுக்காக வழங்கப்படும் விடுப்பு சிறப்பு தற்செயல் விடுப்பு எனப்படும்.
  • சிறப்பு காரணங்கள் மற்றும் விடுமுறை நாட்கள், இதன் விரிவான  விளக்கம் பின்வரும் PDF -ல் கொடுக்கப்பட்டு உள்ளது. 

அலுவலக ஒழுங்கு நடைமுறை மற்றும் அமைப்பு :- 

  • பணியாளர்கள் அலுவலகத்தில் கண்ணியமாகவும் , அமைதியாகவும் நடந்து கொள்ள வேண்டும். 
  • பொது மக்களிடம் மிகவும் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
  • அலுவலக வேலைமுறையில் தங்களுக்கு தெரிய வருகின்ற எந்த ஒரு தகவல்களையும் வெளி யாருக்கோ அல்லது அலுவலகத்தில் உள்ள பிறருக்கோ வெளியிட கூடாது.
  • பணியாளர்கள் தங்கள் குறைகளை அலுவலர் தலைவரிடம் எழுத்து மூலமாக தான் தெரிவிக்க வேண்டும். வாய்மொழியில் தெரிவித்தல் கூடாது.
  • கோப்புகள் மீது எதுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எழுத்து பூர்வமாக முறையினை கையாள வேண்டும். அலுவலக தலைவர் இடம் எழுத்து பூர்வமாக முறையில் ஒப்புதல் வாங்க வேண்டும்.
  • பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தங்களது அடையாள அட்டையினை கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும்.
  • அரசு அலுவலகங்களில் டாட்டன்ஹாம் முறையே நடைமுறையில் உள்ளது. 

அலுவலக நடைமுறை நூல் PDF Format Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் Click Here to Download 

Download JPEG Format  Available in below.