Skip to main content

Probation Calculation Sheet [Excel master data file]

தகுதிகாண் பருவ காலம்.

தகுதிகாண் பருவ காலம் அரசுப் பணியில் ஒரு ஊழியர் இணைந்து பணி வரன்முறை செய்த நாள் முதல் கணக்கிடப்படும்.

ஒவ்வொரு பணித் தொகுதிக்கு ஏற்றவாறு தகுதிகாண் பருவ காலம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தகுதிகாண் பருவ காலம் எவ்வாறு கணக்கீடு செய்யப்படும் ?..... 

  1. ஒரு அரசுப் பணியாளர் பணியில் சேர்ந்து மூன்றாண்டுகளில் இரண்டு ஆண்டுகள் (பணித் தொகுதி ஏற்றவாறு மாறுபடும்) மன நிறைவு அளிக்கும் வகையில் நிறைவு பெற்று இருக்க வேண்டும். 
  2. இரண்டு ஆண்டுகள் எப்போது முடியும்? இவ்வாறு கணக்கீடு செய்வது? பணியில் சேர்ந்த நாள் முதல் தகுதி உள்ள காலங்களில் கணக்கிடப்படும். 
  3. தகுதி உள்ள காலம், தகுதி இல்லாத காலம்  என்பது எவ்வாறு தெரிந்துக் கொள்வது? கீழ் காணும் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது 👇   Elgible and Ineligible for Probationers click to view
  4. தகுதிகாண் பருவம் தொடர்பான அரசு கடிதம் அல்லது அரசு ஆணைகள் உள்ளதா? எவ்வாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது?     👇👇     Click to download
  5. தகுதிகாண் பருவம் தொடர்பான நீதி மன்ற தீர்ப்புகள் உள்ளதா?  👇       Click to download.  

ERG ST தளம் சார்பாக உருவாக்கம் செய்யப்பட்ட கணக்கீட்டு தாள் [Excel File] 

  1. தகுதிகாண் பருவ காலம் கணக்கீட்டு தாள் [Excel Master Data file ] பதிவிறக்கம் செய்ய Click here
  2. Password: ERGST@4 உள்ளீடு செய்து Extract செய்துக் கொள்ளவும். [சிரமங்கள் ஏற்பட்டால் தெரிவிக்கலாம்].
  3. மொபைல் மூலம் Extract செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களின் google play store இல் Zarchiver என்ற அப்பிளிக்கேஷன் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
  4. கணக்கீட்டு தாள் பக்கம் சென்றவுடன் அதில் அரசு ஊழியர் பணியில் சேர்ந்த முதல் காலங்கள் பின்வருமாறு  உள்ளீடு செய்ய வேண்டும் MM/DD/YYYY [மாதம்,நாள்,வருடம்].
  5. Service or leave particulars என்னும் களத்தில் அவர் மேற்கண்ட காலம் பணியில் இருந்தாரா அல்லது விடுப்பில் உள்ளாரா என்று அதில் உள்ள list இல் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். 
  6. மேற்படி காலம் தகுதிகாண் பருவம் கணக்கீடு செய்ய தகுதி உள்ளதா ? இல்லையா ? என்று தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். 
  7. மேற்படி காலங்கள் தகுதிகாண் பருவ காலத்திற்கு கணக்கீடு செய்ய தகுதி உள்ளது என்றால், மேற்பட்ட காலங்களில் இருக்கும் மாதம், வருடம், நாட்கள் தாமாகவே கணக்கீடு செய்யும்.
  8. மேலும், தகுதிகாண் பருவத்தில் கணக்கில் சேராத விடுப்புகள் அனுபவிக்காத அரசு ஊழியர்கள் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணி புரிந்த அரசு ஊழியர்கள் Actual Probation என்ற sheet இல் பணி ஏற்பு செய்த நாள் உள்ளீடு செய்து தெரிந்துக் கொள்ளலாம், (எதற்கும் கணக்கீட்டு தாளில் உள்ளீட்டு உறுதிப் படுத்திக் கொள்வது நலம்).
மேற்காணும் வழிமுறைகள், நமது தளத்தின் மூலம் உருவாக்கம் செய்யப்பட்ட கணக்கீட்டு தாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் ...
வணக்கம்.