Skip to main content

What are the Elgible and Ineligible period for Probationers

அரசுப் பணியில் முதன் முதலாக பணி ஏற்பு செய்த அரசுப் பணியாளர் களுக்கு தகுதிகாண் பருவ காலத்தில் தகுதி உள்ள காலம், மற்றும் தகுதி இல்லாத காலம் என்ன  என்பது கீழ் காணும் பிரிவுகளில் பார்க்கலாம்.

பிரிவு 29 (1) :

அரசுப் பணியில் ஒரு பணித் தொகுதியில் சேர்ந்த ஒருவர், அவர் தகுதிகாண் பருவத்தினர் ஆக இருந்தால், மாற்றுதல் மூலம் வேறொரு பணித் தொகுதிக்கு மாற்றம் செய்து நியமனம் செய்யப்பட்டால், அவரது புதிய பணித் தொகுதியில் செய்த காலத்தை முன் பதவியில் தகுதிகாண் பருவத்தில் கணக்கீடு செய்ய எடுத்துக் கொள்ளலாம்.

பிரிவு 29 (2) :

ஒரு பதவியில் பணி புரிந்து வரும் ஒரு நபர், அதே பணித் தொகுதியில் உயர் பதவியில் பணி புரிய பணி நியமனம் செய்யப்பட்டால், அவர் உயர் பதவியில் பணி புரிந்த நாட்கள், காலங்கள்,  அவரது கீழ் பதவியில் கணக்கீடு செய்ய எடுத்துக் கொள்ளப்படும்.

இவை, பதவி உயர்வு விதிகள் பிரிவு 41 இன் படி அங்கீகாரம் அளிக்க கூடாது.

பிரிவு 29 (3) :

ஒரு பணித் தொகுதியில் இருந்து மற்றொரு பணித் தொகுதிக்கு சட்ட பிரிவு 17(1) அல்லது 17 (2) இன் படி தற்காலிக நியமனம் செய்யப்பட்ட ஒரு தகுதிகாண் பருவத்தினர் புதிய பணியில் பணி புரிந்த காலங்களை அவரது தகுதிகாண் பருவம் கணக்கீடு செய்ய எடுத்துக் கொள்ளலாம்.

பிரிவு 29 (4) :

ஒரு பணித் தொகுதியில் உள்ள தகுதிகாண் பருவத்தினர் தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டு அவர் உயர் பதவியில் பணி புரிந்த காலங்கள் கீழ் பதவியில் தகுதிகாண் பருவம் கணக்கீடு செய்ய எடுத்துக் கொள்ளலாம்.

பிரிவு 29 (5) :

ஒரு பதவியில் நியமனம் செய்யப்பட்ட பின்னர் இராணுவத்தில் பணியாற்றிய பணி காலத்தையும் அவரது தகுதிகாண் பருவம் கணக்கீடு செய்ய எடுத்துக் கொள்ளப்படும், பிரிவு 12 - இன் கீழ் நியமனம் செய்யப்படும் பதவியில் கூட தகுதிகாண் பருவத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

பிரிவு 29 (6) :

ஒரு பதவியில் தகுதிகாண் பருவத்தினாரக உள்ள ஒரு நபர் அயல் பணியில் நியமனம் செய்யப்பட்டால், அவர் அயல் பணியில் பணி புரிந்த காலம் அவரது முன் பதவியில் தகுதிகாண் பருவம் கணக்கீடு செய்ய எடுத்துக் கொள்ளலாம்.


Elgible Periods : 

  1. Service Period
  2. Casual Leave, Compensation Leave, Restricted Holidays along  with government holidays
  3. Compulsory Waiting Period 
  4. Training Period
  5. Deputation / Foreign Service
  6. Transit Period
  7. Sec 29 (1) to (6) Service Periods  (as  Above)

Inelgible Periods

  1. Except  Other than Casual Leave
  2. Prefix and Suffix added along with Earn Leave
  3. Temp. Suspension Period
  4. Remove from the service period
  5. used the more transit period