தகுதிகாண் பருவம்:
அரசுப் பணியில் ஒரு நபரை முதன் முதலில் பணி அமர்த்தும் முன்பு அவரை முழு உறுப்பினராக நியமனம் செய்யாமல், அவரது செயல் திறன், நடவடிக்கை, மற்றும் வரையறை செய்யப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறும் திறன் ஆகியவற்றை கண்காணித்து வர ஆணையிடப்படும், இக்காலம் தகுதிகாண் பருவ காலம் எனப்படும்.
இவை சில பதவியில் மூன்றாண்டு காலத்தில் இரண்டாண்டு காலமும், ஓராண்டு காலமும், பணித் தொகுதிக்கு உட்பட்டு மாறுபடும்.
இவை ஒரு நபர் அரசுப் பணியில் சேர்ந்த நாள் முதல் (பணி வரன்முறை செய்த நாள் முதல்) துவங்கும்.
பிரிவு 28 (1) தற்காலிக நியமனம் தகுதிகாண் பருவம் துவங்குதல்:
அவசர நிலை அல்லது பொது நலன் கருதி ஒரு பணித் தொகுதியில் உள்ள பதவியில் உடனடியாக நிரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டால் பிரிவு 17 (1) மற்றும் (2) இன் கீழ் பணி நிமணம் செய்யப்பட்ட நபர்களுக்கும் அப்பதவிகும் தகுதிகாண் பருவம் வரையறை செய்யப்பட்டால் அவர் பணி ஏற்பு செய்யப்பட்ட நாள் முதல் தகுதிகாண் பருவம் தொடங்கும்.
பிரிவு 28 (2) ஊதிய உயர்வு :
விதி 17 (1) இன் படி நியமனம் செய்யப்படும் நபருக்கு அவர் பணி ஏற்பு செய்த நாளில் இருந்து அவர் ஊதிய உயர்வு பெற தகுதி உண்டு. ஆணையில் நியமனம் அதிகாரி இதை சொல்ல வேண்டும்.