Skip to main content

அடிப்படை விதி 22 (ஆ) உட்பிரிவு 8 (I) - ன் படி ஊதியம் நிர்ணயம்.

  • அடிப்படை விதிகள் 22 (ஆ) உட்பிரிவு 8(I) - ன் படி ஊதியம் நிர்ணயம் என்பது  ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின் பதவி உயர்வு நாளில் கீழ் நிலைப் பதவியில் பெற்று வந்த ஊதிய விகிதத்தில் ஒரு ஊதிய உயர்வு வழங்கிய பிறகு, உள்ள தொகைக்கு  உயர் பதவியின் ஊதிய விகிதத்தில் சமமாக இருந்ததால் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அடுத்த நிலையில் நிர்ணயம் செய்யும் முறையாகும்.
  • இருப்பினும், ஒரு அரசு ஊழியர் தேர்வாணையத்தின் மூலம் வேறு ஒரு பதவிக்கு சென்றால் அவருக்கு இந்த விதியின் படி கணக்கீடு செய்து நிர்ணயம் செய்ய இயலாது.
  • மேலும், கீழ் நிலை பதவியின் ஊதிய விகிதத்தில் பதவி உயர்வுக்காக வழங்கப்படும் ஊதிய உயர்வுக்கு பிறகு, உள்ள தொகை, மேல் நிலை பதவியின் ஊதியம் ஆரம்ப நிலைக்கு குறைவாக இருந்தால், மேல் நிலைப் பதவியின் ஆரம்ப நிலையில் அவரது ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 
  • மேலும், இந்த விதியின் படி நிர்ணயம் செய்தால், அவர் பதவி உயர்வு நாளினை கொண்டு அவரது காலமுறை ஊதியம் உயர்வு முன்னிலைப் படுத்தப்படும். 

உதாரணம் 1:-  

Click Here

உதாரணம் 2 :- 

  1. A என்ற அலுவலர் பதவி உயர்வு பெற்று அவர் உயர் பதவியில் 20.09.2021 - இல் பணியேற்பு செய்துக் கொண்டார்.
  2. அவர் கீழ் நிலைப் பதவியில் பதவி உயர்வு அன்று பெற்ற ஊதியம் - 28500/- level 10 , cell 12.
  3. பதவி உயர்வு பெற்ற பதவியின் ஊதிய விகிதம் - level 18 
  4. அவரது இயல்பான காலமுறை ஊதியம் உயர்வு - ஏப்ரல் 1 ஆகும்.
  5. எனவே, A என்பவருக்கு அடிப்படை விதி 22 (ஆ) உட்பிரிவு 8(I) இன் படி ஊதியம் நிர்ணயம் செய்க.   

அடிப்படை விதி 22 (ஆ) உட்பிரிவு 8(I)

  1. தனியர் உயர் பதவியில் சேர்ந்த நாள் - 20.09.2021 பிற்பகல்.
  2. தனியர் கீழ் நிலைப் பதவியில் 01.04.2021 - அன்று பெற்ற ஊதியம் - ரூ.28500/- [ரூ.20600 - 75900/-] level 10, cell 12. 
  3. கீழ் நிலைப் பதவியில் பதவி உயர்விற்கு ஒரு ஊதிய உயர்வு - ரூ. 29400/- [ரூ.20600 - 75900/-] level 10, cell 13. 
  4. பதவி உயர்வு ஊதிய விகிதத்தில் ஆரம்ப நிலை என்பது ரூ.36900/- ஆகும். எனவே நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் - ரூ.36900/- [ரூ.36900 - 135100/- ] level 18, Cell 01. [பணப்பலன் - 21.09.2021 முற்பகல் முதல்]
  5. அடுத்த ஊதிய உயர்வு நாள் - 01.07.2022 ஆகும்.  
உதரானம் 3:-   
  1. B என்ற அரசுப் பணியாளர் அலுவலக உதவியாளர் நிலையில் இருந்து இளநிலை உதவியாளர் ஆக பதவி உயர்வு பெற்று, பதவி உயர்வு பணியில் 17.12.2021 அன்று சேர்ந்துக் கொண்டார்.
  2. அவரது இயல்பான ஆண்டு ஊதிய உயர்வு ஜூலை 1,  ஆகும்.
  3. அவர் அலுவலக உதவியாளர் நிலையில் கடைசியாக பெற்ற ஊதியம் ரூ.26000/- level 01, cell 18.
  4. அடிப்படை விதி 22 (ஆ) உட்பிரிவு 8(I) இன் படி ஊதியம் நிர்ணயம் செய்க. 
அடிப்படை விதி 22 (ஆ) உட்பிரிவு 8(I)

  1. தனியர் உயர் பதவியில் சேர்ந்த நாள் - 17.12.2021 பிற்பகல்.
  2. தனியர் கீழ் நிலைப் பதவியில் 01.07.2021 - அன்று பெற்ற ஊதியம் - ரூ.26000/- [ரூ.15700 - 58100 /-] level 01, cell 18
  3. கீழ் நிலைப் பதவியில் பதவி உயர்விற்கு ஒரு ஊதிய உயர்வு - ரூ.26800/-[ரூ.15700 - 58100 /-] level 01, cell 18
  4. பதவி உயர்வு ஊதிய விகிதத்தில்  ரூ.26800/- என்ற தொகைக்கு சமமான ஊதியம் இல்லை, எனவே அதற்கு அடுத்த நிலையில் ஊதியம் நிர்ணயம்  - ரூ.27000/- [ரூ.19500 - 71900/- ] level 08, Cell 12 . [பணப்பலன் - 18.12.2021 முற்பகல் முதல்]
  5. அடுத்த ஊதிய உயர்வு நாள் - 01.10.2022 ஆகும். 
உதாரணம் :4  
  1. X என்ற அலுவலர் துணை வட்டாட்சியர் நிலையில் இருந்து வட்டாட்சியர் ஆக பதவி உயர்வு பெற்று, உயர் பதவியில் 10.10.2022 அன்று பணியில் சேர்ந்துக் கொண்டார். 
  2. X என்ற அலுவலர் தேர்வு நிலையில் 16.12.2021 அன்று பெற்ற ஊதியம் - ரூ.51000/- level 18, Cell 12. 
  3. X என்ற அலுவலரின் இயல்பான ஆண்டு ஊதிய உயர்வு அக்டோபர் 1 ஆகும். 
  4. அடிப்படை விதி 22 (ஆ) உட்பிரிவு 8(I) இன் படி ஊதியம் நிர்ணயம் செய்க.

அடிப்படை விதி 22 (ஆ) உட்பிரிவு 8(I)

  1. தனியர் உயர் பதவியில் சேர்ந்த நாள் - 10.10.2022  பிற்பகல்.
  2. தனியர் கீழ் நிலைப் பதவியில் கடைசியாக   பெற்ற ஊதியம் - ரூ.51000/- [ரூ. 36900 - 135100/-] level 18, cell 12.
  3. கீழ் நிலைப் பதவியில் பதவி உயர்விற்கு ஒரு ஊதிய உயர்வு - ரூ.52500/-[ரூ. 36900 - 135100/-] level 18, cell 13.
  4. பதவி உயர்வு ஊதிய விகிதத்தில் ரூ.52500/- என்ற தொகைக்கு சமமான ஊதியம் இல்லை, எனவே அதற்கு அடுத்த நிலையில் ஊதியம் நிர்ணயம் - ரூ.53800/- [ரூ. 37700 - 138500/-] level 20, cell 13.. [பணப்பலன் - 11.01.2022 முற்பகல் முதல்]
  5. அடுத்த ஊதிய உயர்வு நாள் - 01.01.2023 ஆகும். 

  • அடிப்படை விதி 22 (ஆ) உட்பிரிவு 8(I) இன் படி ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக  மேற்கண்ட உதாரணங்கள்  பதிவு செய்யப்பட்டு உள்ளது. 
  • அனைத்து அலுவலர்களும் அரசுப் பணியில் விதிப்படி பணியாற்ற வேண்டும். விதிகளை தெரிந்துக் கொள்வோம். 
  • இவை அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய பதிவு ஆகும்.